AK 64..இல் இணையும் Malayala Superstar
தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள AK64 படத்திற்காக அஜித் குமாரும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் மீண்டும் கைகோர்கிறார்கள்.
அஜித் கடைசியாக நடித்த குட் பேட் அக்லி படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார்.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் AK64...இல் இணைய அதிக வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.
அஜித்தின் 64வது படத்தின் தயாரிப்பாளர்கள் ஒரு முக்கிய வேடத்திற்காக மூத்த நட்சத்திரத்தை அணுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதிக்கும் இந்தக் கதையை மோகன்லாலிடம் கூறியுள்ளார், இருப்பினும், படம் மற்றும் அதன் நடிகர்கள் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளிவரவில்லை.
அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பார் என்றும், தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, அஜித் குமார் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை நவம்பர் 2025 இல் தொடங்குவார் என்று உறுதிப்படுத்தியிருந்தார்.


