மாளவிகா மோகனன், பெண்களை தரக்குறைவாக நடத்தும் ஹீரோக்களை கடுமையாக சாடியுள்ளார்
திரைப்படத் துறையில் பெண்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவது குறித்து நடிகை மாளவிகா மோகன் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில் பல ஆண் நடிகர்கள் பொது இடங்களில் பெண்ணியவாதிகளாக நடிக்கிறார்கள், ஆனால் அவர்களின் உண்மையான நடத்தை வேறு என்று கூறினார்.
திரைத்துறையில் ஆண்களை ஒருவிதமாகவும் பெண்களை ஒரு விதமாகவும் பார்க்கும் மனப்பாங்கு வேரூன்றி விட்டது இது எங்க போய் முடியும் என்று தெரியவில்லை இந்த போக்கை நான் கடந்த ஐந்தாண்டுகளில் நிறைய பேரிடம் பார்த்திருக்கிறேன்.
திரைப்படத் துறையில் இந்த ஏற்றத்தாழ்வு ஒருபோதும் முடிவுக்கு வராது,” என்று அவர் கூறினார்.
“ஆண்கள் புத்திசாலியாகிவிட்டனர் பெண்களை சமமாக நடத்துவது மற்றும் முற்போக்குவாதியாக பேசும் நடிகர்கள். திரைக்குப் பின்னால், எதிர்மாறாக நடந்துகொள்வதைக் கண்டிருக்கிறேன்.
“அவர்கள் பெண்களை வெறுக்கும் நபராக மாறுகிறார்கள்,”. “இது பாசாங்குத்தனம்.” பெண்கள் தங்கள் திறமைக்காக மதிப்பிடப்படுவதை விட, படங்களில் அவர்களது தோற்றதிற்கே முன்னுரிமை கொடுகிறார்கள் என்று தைரியமாக கூறியிருக்கிறார்.