in

அருள்மிகு உச்சிஷ்ட விநாயகர் திருக்கோவில் மஹாசங்கடஹர சதுா்த்தி கோலாகலம்

அருள்மிகு உச்சிஷ்ட விநாயகர் திருக்கோவில் மஹாசங்கடஹர சதுா்த்தி கோலாகலம்

 

அருள்மிகு உச்சிஷ்ட விநாயகர் திருக்கோவில் மஹாசங்கடஹர சதுா்த்தி கோலாகலம். திரளான பக்தா்கள் பங்கேற்பு.

நெல்லை மாவட்டம் திருநெல்வேலியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது மணிமூர்த்தீஸ்வரம். இங்கு ஆசியாவிலேயே ராஜகோபுரத்துடன் தனி மூலவராக அமைந்திருக்கும் விநாயகர் ஆலயம் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

8 நிலை மண்ட பங்கள், 3 பிரகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இந்தக் கோவிலின் மூலவரான விநாயகப்பெருமான், நீல சரஸ்வதியை தன் மடியில் அமர்த்தி வைத்தப்படி காட்சி தருகிறார்.

தன்னுடைய 32 தோற்றங்களில் 8–வது வடிவமாக போற்றப்படும் உச்சிஷ்ட கணபதியாக இத்தலத்தில் விநாயகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். சிறப்புவாய்ந்த இத் திருக்கோவிலில் ஆடி மாத மஹா சங்கடஹரசதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதற்காக மாலையில் நடை திறக்கப்பட்டதும் சன்னதி முன்பு 108 கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடா்ந்து சங்கல்பம் செய்யப்பட்டு நெய் பொாி அருகம்புல் மோதகம் போன்றவைகளால் கணபதி ஹோமம் நடைபெற்று மகா பூா்ணாகுதியானது நடைபெற்றது.

பின்னா் மூலவா் உச்சிஷ்ட கணபதிக்கும், உற்சவா் விநாயகப்பெருமானுக்கும் மாப்பொடி,மஞ்சள், வாசனைப்பொடி, பால், தயிா், பஞ்சாமிருதம், அளநீா், சந்தணம் கொண்டு அபிஷேகமும் அதனை தொடா்ந்து பூஜிக்கப்பட்ட 108 கலச கும்ப அபிஷேகமும் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் கொலுவீற்றிருந்த மூலவா் உச்சிஷ்ட கணபதிக்கு தீபாராதனைகள் காட்டப்பட்டது. உற்ச்சவா் விநாயகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்தாா்.

ஆடி மாத தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் கேது தோஷம் நீங்கும் திருமண தடைகள் அகலும். குடும்பத்தில் இருக்கும் பொருளாதார கஷ்ட நிலை நீங்கும் என்பது பொியவா் வாக்கு.

ஏராளமான பக்தா்கள் மஹாசங்கடஹர சதுா்த்தி யில் கலந்துகொண்டு விநாயகப்பெருமானை தாிசனம் செய்தனா்.

What do you think?

தேசிய பாதுகாப்பு படையுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது

மரக்காணம் அருகே கந்தாடுசெல்லியம்மன் கோயில் திருவிழா 300 பெண்கள் பால்குட அபிஷேகம்