சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி பகுதியில் நடைபெற்ற ஸ்ரீ மதுர காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த திரளான பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேகம் தரிசனம் செய்தனர்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே குமாரகுடி கிராமத்தில் ஸ்ரீ மதுர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் விழாவுக்கான புனரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், அப்பணிகள் முடிவுற்றபின் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு புண்ணிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் கலசம் கோவில் முன்புறம் உள்ள யாகசாலையில் வைக்கப்பட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன..
மகா மந்திரங்கள் முழங்க புனித நீர் கலசம் மங்கள வாத்தியங்களோடு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவில் கோபுரத்தின் மீது கொண்டு செல்லப்பட்டது. இதன் பின்னர் மங்கள வாத்தியங்கள் மற்றும் மகா மந்திரங்கள் முழங்க மூலவர் கோவில் கோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர் மூலவர் அபிஷேகமும் நடைபெற்றது. இதேபோன்று பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது..
இந்த விழாவினை காண பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேகம் தரிசனம் செய்து, மூலவர் ஸ்ரீ மதுரகாளியம்மனை வணங்கியும் சென்றனர்.
சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி பகுதியில் நடைபெற்ற ஸ்ரீ மதுர காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்