‘கூலி’ சென்சார் ரகசியத்தை உடைத்த லோகேஷ்! ஜனநாயகன் படத்தில் கெஸ்ட்ரோலாக லோகேஷ்!
ரஜினிகாந்த் படம்னாலே குடும்பத்தோட தியேட்டருக்குப் போறதுதான் நம்ம ஊரு வழக்கம்.
ஆனா ‘கூலி’ படத்துக்கு ‘A’ சர்டிபிகேட் கிடைச்சது அப்போ பெரிய சர்ச்சையாச்சு.
இது பத்தி லோகேஷ் இப்போ என்ன சொல்லிருக்காருன்னா: சென்சார் போர்டு படத்தைப் பார்த்துட்டு, “U/A வேணும்னா 35 இடத்துல சீன்களை கட் பண்ணுங்க”ன்னு சொல்லிருக்காங்க.
ஏற்கனவே என்னோட படங்கள் கொஞ்சம் சிக்கலா இருக்கும். இதுல 35 இடத்துல கட் பண்ணிட்டா படம் யாருக்குமே புரியாம போயிடும்னு லோகேஷ் பயந்திருக்காரு.
இது பத்தி ரஜினி சார் கிட்டயும், தயாரிப்பாளர் (சன் பிக்சர்ஸ்) கிட்டயும் பேசியிருக்காரு. “சீன்களை கட் பண்ணி புரியாத படத்தைக் கொடுக்கறதுக்கு பதிலா, ‘A’ சர்டிபிகேட் வாங்கிக்கலாம், ஆனா முழுப் படத்தைக் கொடுப்போம்”னு அவங்க லோகேஷுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்காங்க.
படம் ‘A’ சர்டிபிகேட் வாங்குனதுனால, ஃபேமிலி ஆடியன்ஸ் கம்மியா வந்தாங்க. இதனால சுமார் 40 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை வசூல் பாதிச்சதா லோகேஷ் சொல்லிருக்காரு.
ஆனா ரசிகர்களுக்கு தரமான சினிமாவை கொடுக்கணும்ங்கிறதுக்காக அந்த நஷ்டத்தை ஏத்துக்கிட்டாராம். கூலிக்கு அப்புறம் மறுபடியும் ரஜினி-லோகேஷ் கூட்டணி அமையும்னு பேசப்பட்டது. ஆனா அது நடக்கல. அதுக்கு லோகேஷ் சொன்ன காரணம்: “ரஜினி சாரும், கமல் சாரும் ஜாலியான ஒரு படம் பண்ணலாம்னு கேட்டாங்க. ஆனா அந்த ஸ்டைல் எனக்கு செட்டாகாது. அதனாலதான் தலைவர் 173-ல நான் இல்ல.
“இன்னொரு செம அப்டேட் என்னன்னா, தளபதி விஜய்யோட கடைசிப் படமான ‘ஜனநாயகன்’-ல லோகேஷ் கனகராஜ் ஒரு கெஸ்ட் ரோல்ல (Cameo) நடிச்சிருக்காராம்.
இதை அவரே இப்போ கன்பார்ம் பண்ணிட்டாரு. ‘ஜனநாயகன்’ படமும் இப்போ சென்சார் பிரச்சனையில தான் சிக்கி இருக்குங்கிறது குறிப்பிடத்தக்கது.


