லோகா’ Hero சப்ஜெக்ட்…டை உடைத்த பெண்… ஹீரோ
Lokah reveals its success secrets today evening
மலையாளத் திரைப்படமான லோகா’ (Lokah) இந்திய சூப்பர் ஹீரோ Subject…டை உடைத்திருக்கும் ஒரு புதிய முயற்சி ‘லோகா’ திரைப்படம்.
வழக்கமான சூப்பர் ஹீரோ கதைகளைத் தாண்டி, கேரள நாட்டுப்புறக் கதைகளையும், புராணங்களையும் இணைத்து ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டிருப்பது பாராட்டுகுரியது….
இந்திய சினிமாவுக்கு ஒரு புதிய திசையைக் காட்டியிருகிறது என்று பல விமர்சகர்கள் புகழ்ந்து தள்ளியிருகின்றனர்.
குறைந்த பட்ஜெட்டில் பிரம்மாண்டமான உலகத்தை உருவாக்கியிருப்பதில் படக்குழுவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. குறிப்பாக, ஒளிப்பதிவு (Nimish Ravi), பின்னணி இசை (Jakes Bejoy) மற்றும் சண்டைக் காட்சிகள் அற்புதமாக வடிவமைக்கபட்டிருகிறது.
பெங்களூருவின் குறுகிய தெருக்கள் போன்ற எளிமையான இடங்களில் கூட பிரம்மாண்டமான காட்சிகளை கொடுக்க முடியும் என்று பிரம்மாண்டதை நம்பி மோசம் போன இயக்குனர்களுக்கு உரைக்க (உரக்க) சொல்லி இருக்கும்
படம்(பாடம்).
படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன், வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து விலகி, Body Language மற்றும் முகபாவனைகளால் தனது “சந்திரா’ கதாபாத்திரத்தை சக்தியுள்ளதாக மாற்றி மிரட்டி இருக்கிறார்…
அர்ப்பணிப்பான நடிப்புக்கு தயங்காமல் பாராட்டளாம்.. நஸ்லன் ஒரு காமெடி கதாபாத்திரமாக ஆரம்பித்து, படத்தின் கதையுடன் இணைந்து சிறப்பாக நடித்தது மட்டும்மல்லாமல் இருவருக்கும் உள்ள கெமிஸ்ட்ரி நல்லாவே வொர்க் அவுட் ஆகி இருக்கிறது.
வில்லன் நாச்சியப்பா கதாபாத்திரம் (Sandy) செம்ம Tough கொடுத்திருகிறார்.
ஹாலிவுட் பாணியில் வில்லனை காட்டாமல் நமது பாரம்பரியத்தில் புதிய வில்லனை உருவாக்கியிருப்பதிற்கு காலரை தூக்கி விட்டுக்கலாம் ரசிகர்களே. முதல் பாதி விறுவிறுப்பாகவும், ‘அடுத்தது என்ன?’ என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் சென்றாலும்., இரண்டாம் பாதியில் கதை சருகினதற்கு காரணம், பல புதிய கதாபாத்திரங்கள் Cameos என்ற புது Trend…டால் உள்ளே நுழைந்த வினை.
வெறும் கைதட்டலுக்காக மட்டும் வைக்கப்பட்ட சிறப்பு தோற்றங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று சிலர் விமர்சித்து உள்ளனர்.
‘லோகா- அத்தியாயம் 1’ (Lokah Chapter 1) என்பது முதல் பாகம் என்பதால், முழுமையான கதையாக இல்லாமல், ஒரு புதிய சினிமா..வை உலகத்திற்கு அறிமுகப்படுத்துவதற்க்காகவே மட்டும் எடுக்கபட்டதாக தெரிகிறது.
பல கேள்விகளுக்குப் பதில் இல்லாமல், அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை மட்டும் ஏற்படுத்தியுள்ளது. குறை இல்லாமல் நிறை இல்லை …. ‘லோகா’ ஒரு சில குறைகளை தவிர்த்து பார்த்தால் மலையாள சினிமா மற்றும் இந்திய சினிமாவுக்கு ஒரு புதிய பாதையை காட்டி இருக்கிறது.
Technically Brave Effort. ரசிகர்கள் மட்டுமல்ல விமர்சகர்கள் கூட திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டிய படம் என்று பரிந்துரைத்திற்பது Promotion..னுக்காக அல்ல என்று அடித்து சொல்லலாம்.
புதிய முயற்சிக்கு அதரவு கொடுக்க லாமே? எத்தனை நாளைக்கு Commercial பின்னாடி ஓடிட்டிருகிறது. இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோவான மலையாளப் படம், சில வாரங்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து, பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனைக்கான Secret…டை படக்குழுவினர் இன்று மாலை 6… மணிக்கு கூறவருகின்றனர். THE WAIT IS ALMOST OVER! Today at 6 PM, The world of Lokah reveals its secrets… Stay Tuned! என்று படகுழுவினர் போஸ்ட் வெளியிட்டிருகின்றனர்.


