எனக்கு லாஜிக் முக்கியம் இல்லை… ரசிகர்களின் சந்தோசம் தான் முக்கியம்
இந்த தசரா தெலுங்கு சினிமா பிரியர்களுக்கு ஒரு பிரமாண்டமான கொண்டாட்டமாக அமைய உள்ளது, ஏனெனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு நட்சத்திர ஹீரோ படங்களான பவன் கல்யாணின் தே கால் ஹிம் ஓஜி மற்றும் பாலகிருஷ்ணாவின் அகண்டா 2: தாண்டவம் ஆகியவை ஒரே நாளில், செப்டம்பர் 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகின்றன.
போயபதி ஸ்ரீனுவுடன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் அகண்ட 2: தாண்டவம் படத்தின் டீசர், சூப்பர் ஸ்டாரின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) வெளியிடப்பட்டது..
அகண்டா 2 – தாண்டவம் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடமிருந்தும், திரைப்பட ஆர்வலர்களிடமிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பான்-இந்தியா Movie…யாக உருவாகும் இந்த அதிரடித் திரைப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார்.
டீசர், ‘அகண்டா ருத்ர சிக்கந்தர் கோராவின்’ வருகையைக் காட்டுகிறது. “மரணக் கடவுள் கூட என் சிவபெருமானின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார். நீங்கள் தப்பிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? அப்பாவிகளின் உயிரைப் பறிக்க முடியுமா?” என்று அகண்டா தனது எதிரியிடம் கூறுகிறார்.
அவர் தனது தோள்ளுக்கு மேல் கிட்டத்தட்ட பத்து துப்பாக்கி ஏந்தியவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு, தனது திரிசூலத்தை ஒரு முறை சுழற்ற, திரிசூலம் தானாகவே சுத்தி சுத்தி எதிரிகளின் தலையை வெட்டுகிறது.
இவரின் மற்ற படத்தைப் போலவே, இந்த படத்திலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிரடி காட்சிகள் வைக்கப்படிருப்பதை பார்த்த ரசிகர்கள் Comments செய்ய… பாலகிருஷ்ணா..வோ எனக்கு லாஜிக் முக்கியம் இல்லை ரசிகர்களின் சந்தோசம் தான் முக்கியம் அவர்களை திருப்தி படுத்தும் வகையில் காட்சிகள் படத்தில் இருக்கும் படி பார்த்துகொள்வேன்..இன்னு சொல்றாரு… இவர கழுவி ஊத்துராங்க…ங்கரதே மறந்து பேசிட்டுருகாரு..