in

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள 9 கோபுரங்கள், விமானங்கள் மற்றும் கல்காரத்திற்கு ஒளிரூட்டல் பணி

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ரூ.7.58 மதிப்பீட்டில் இரவு நேரங்களில் 9 கோபுரங்கள் வண்ண மின் விளக்குகளால் ஒளிரூட்டும் பணி..

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளிக் காட்சி வாயிலாக திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள 9 கோபுரங்கள், விமானங்கள் மற்றும் கல்காரத்திற்கு ஒளிரூட்டல் பணியை துவக்கி வைத்து ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகத்தை திறந்து வைத்தார்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இத்திருக்கோயிலுக்கு வெளியூர், பல்வேறு வெளி மாநில மக்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் என பெருமளவில் வருகின்றனர். அதிலும் பௌர்ணமி மற்றும் தீப திருவிழா காலங்களில் இலட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.

திருவண்ணாமலை ண்ணாமலையார் திருக்கோயிலில் ரூ.7.58 lakhs மதிப்பீட்டில் இரவு நேரங்களில் பல வண்ணங்களில் திருக்கோயிலில் உள்ள 9 கோபுரங்கள், 17 விமானங்கள் வண்ண மின்விளக்குகளால் ஒளிரூட்டும் பணிகளும், கல்காரங்களில் ஒளிரூட்டும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ரூ. 2.95 கோடி மதிப்பீட்டில் கிரிவலப்பாதையில் சோணாநதி தோப்பு அருகில் 11,218 சதுரடியில் ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது இத்திட்ட பணிகளையும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக திறந்து திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து தற்போது அண்ணாமலையார் கோவிலில் மின் விளக்குகள் பிரகாசமாக ஓளிருட்டப்பட்டுள்ளது.

What do you think?

கனமழையால் துண்டிக்கப்பட்ட சாலை தனித்தீவாக மாறிய கிராமம்

திருவண்ணாமலை நகரில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கன மழை…..