in

சட்டமன்றத் தேர்தல் – 2026 ஆலோசனைக் கூட்டம்

சட்டமன்றத் தேர்தல் – 2026 ஆலோசனைக் கூட்டம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத் தேர்தல் – 2026 ஆலோசனைக் கூட்டம் , மதுரை மாநகர் மாவட்டக் கழகம் மற்றும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் இன்று நடைபெற்றது.

அதிமுக முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ மற்றும் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்றனர்.

 

இவர்களுடன் அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மு.க. அழகிரியின் முன்னாள் ஆதரவாளர்கள் மன்னன் மற்றும் எஸ்.ஆர். கோபியும் வருகை கவனிக்கத் தக்கது.

கூட்டத்தில் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி பேசுகையில்,

வருகிற 1 ந் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயக NDA கூட்டணியில் பாரதப் பிரதமரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

கூட்டத்திற்கு வரும் அதிமுக தொண்டர்கள், கட்சித் துண்டை அணிந்து வருவதோடு, தலைவர்கள் பேசும் போது தங்கள் துண்டுகளை தலைக்கு மேல் ஆட்டி உற்சாகப்படுத்த வேண்டும்.

அனைத்து அதிமுக தொண்டர்களும், 2026 ல் எடப்பாடி பழனிச்சாமியை முதல் அமைச்சராக ஆக்க, கடுமையான தேர்தல் பணியாற்ற வேண்டும்என கே.பி. முனுசாமி கேட்டுக் கொண்டார்.

What do you think?

லட்சுமி நாராயணபெருமாள், சோமேஸ்வரர் கோவிலில் மாசி மக தேர் திருவிழா கொடியேற்றம்

சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி கிருத்திகையையொட்டி108 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது.