மழைபெய்ய வேண்டி பகவதியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
மழைபெய்ய வேண்டி கொடைரோடு அருகே செட்டியபட்டி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான, அருள்மிகு காளியம்மன், பகவதியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது…
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள செட்டியபட்டி கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதியம்மன் கோவில், உலக அமைதி வேண்டியும், கடந்தாண்டுகளை போல நல்ல மழைபெய்து விவசாய செழிக்கவும் விளக்குபூஜை நடைபெற்றது.
இதில் நூற்றும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு அம்மனை போற்றி மந்திரங்கள் கூறி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.
மேலும் இந்த பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஐநூற்றுக்கும் கலந்துகொண்டனர்.

விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்…


