in

விளம்பரத் தூதுவரா (Brand Ambassador) ‘லால் ஏட்டன்’ மோகன்லால்


Watch – YouTube Click

விளம்பரத் தூதுவரா (Brand Ambassador) ‘லால் ஏட்டன்’ மோகன்லால்

 

நம்ம ஊருல எப்படி SETC, TNSTC-யோ, அதே மாதிரி கேரளாவோட அடையாளம் தான் KSRTC.

இப்போ இந்த அரசு போக்குவரத்து கழகத்தோட விளம்பரத் தூதுவரா (Brand Ambassador) நம்ம ‘லால் ஏட்டன்’ மோகன்லால் நியமிக்கப்பட்டிருக்காரு.

இந்த அறிவிப்புல ரொம்ப ஆச்சரியமான விஷயம் என்னன்னா, இந்த விளம்பரங்கள்ல நடிக்க மோகன்லால் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கப்போறது இல்லையாம்!

பெரிய நடிகர்கள் எல்லாம் ஒரு விளம்பரத்துக்கு கோடிக்கணக்குல கேக்குற இந்த காலத்துல, தன் மாநிலத்துக்காக “முழுக்க முழுக்க இலவசமா” செஞ்சு தர்றேன்னு அவர் சொன்னது இப்போ இந்தியாவையே ஆச்சரியப்பட வச்சிருக்கு.

இனிமே டிவியில வர்ற விளம்பரம், சோஷியல் மீடியா, பஸ் ஸ்டாண்ட்னு எல்லா இடத்துலயும் மோகன்லால் தான் KSRTC-க்காக பேசுவாரு.

அரசு பேருந்துகளைப் பயன்படுத்துறதுனால வர்ற நன்மைகள். பஸ்களோட பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு.

இளைஞர்கள் மத்தியில அரசு பஸ் மேல ஒரு நல்ல மதிப்பைக் கொண்டு வர்றதுதான் இதோட மெயின் நோக்கம்.கேரள அரசு இப்போ மொத்தம் 4,952 பேருந்துகளை இயக்கிட்டு வர்றாங்க.

கேரளாவுக்குள்ள மட்டும் இல்லாம தமிழ்நாடு, கர்நாடகான்னு அண்டை மாநிலங்களுக்கும் நம்ம கேரளா பஸ்கள் தான் லட்சக்கணக்கான மக்களை ஏத்திட்டு போகுது.

எரிபொருள் விலை உயர்வு, மெயின்டனன்ஸ் செலவுனு கஷ்டத்துல இருக்குற இந்த நேரத்துல, மோகன்லால் மாதிரியான ஒரு பெரிய ஸ்டாரோட முகம் KSRTC-க்கு பெரிய பலமா அமையும்னு எதிர்பார்க்கப்படுது.

ஏற்கனவே பேரிடர் காலங்கள்ல உதவி பண்றதுல மோகன்லால் சார் முன்னாடி இருப்பாரு. இப்போ அரசு நிறுவனத்துக்காக சம்பளமே இல்லாம உழைக்க முன்வந்தது மூலமா, அவர் கேரளாவோட உண்மையான மகன் தான்னு ரசிகர்கள் கொண்டாடிட்டு இருக்காங்க!


Watch – YouTube Click Shorts

What do you think?

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 ‘கில்லர்’ படப்பிடிப்பை நிறுத்தி வச்சிருக்காங்க