in

கிழவம்பூண்டி அருள்மிகு முனீஸ்வரன் மற்றும் அம்மச்சார் அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா …

கிழவம்பூண்டி அருள்மிகு முனீஸ்வரன் மற்றும் அம்மச்சார் அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா …

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம், கிழவம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முனீஸ்வரன் மற்றும் அம்மச்சார் அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, ஆடி மாதம் 18ஆம் தேதி காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, எஜமானர் சங்கல்பம், கோ பூஜை, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றன. பின்னர் சுவாமி சிலைகளுக்கு கறிக்கோள ஊர்வலம் எடுத்து செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று, பூர்ணாஹுதி முடிவில் ‘கடம் புறப்பாடு’ மேளதாளங்கள் முழங்க திருக்கோவில் வளாகத்தில் வலம் வந்து, அருள்மிகு முனீஸ்வரர் மற்றும் அம்மச்சார் அம்மன் குதிரை வாகனங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பொதுமக்களுக்கு திருக்கோவில் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாட்டு குழுவினர் மற்றும் கிழவம்பூண்டி கிராம பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

What do you think?

மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார் கோமதி Priya

கோரிக்கையை  ஏற்று… நடிகை M.N.  Rajam…… அம்மாவை சந்தித்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்