in

பெரியகோட்டை ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா

பெரியகோட்டை ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா

 

திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் பெரிய கோட்டையில் புதிதாக ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் திருக்கோயில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று 15 11 2025 முதல் கால பூஜை ஆக தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் நவகிரக ஹோமம் லட்சுமி ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் சிவாச்சாரியார் நடைபெற்றது.

தொடர்ந்து இரண்டாம் கால பூஜை ஆக இன்று 16.11.2025 காலை மூல மந்திர ஹோமம், பிரம்மசுத்தி, ரக்க்ஷா பந்தனம், நாடி சந்தானம், ஸ்பர்ஷஹூதி எனப்படும் உயிரூட்டல் மற்றும் மகாபூர்ண ஹுதி பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்றது. அதை தொடர்ந்து கோயில் மூல கோபுர கலசங்களில் புனித நீர் போற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் கும்பாபிஷேக தண்ணீர் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டு பூக்கள் தூவப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு புனித நீர் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது.    

பெரிய கோட்டை, பில்லம்மநாயக்கன்பட்டி, மா.மு. கோவிலூர், புகையிலைப் பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷே விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் குருசாமிகள் மணிகண்டன் மணிகண்டன் சரவணன் கருப்பன் மற்றும் ஐயப்பா பக்தர்கள் செய்து இருந்தனர்.

What do you think?

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு தீர்த்தவாரி

கார்த்திகை முதல் நாள் ஐயப்பன் கோவில்களில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்