பரமத்தி வேலூர் ஸ்ரீ கண்டியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த அனிச்சம்பாளையத்தில் ஸ்ரீகண்டியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், அனிச்சம்பாளையம்
ஸ்ரீ கண்டியம்மன் திருக்கோவில் ஆலய புனராவர்த்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை மிக விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக விநாயகர் வழிபாட்டுடன் நேற்று மாலை முதல் கால யாகசாலை பூஜையும், இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவேற்றி பூர்ணாகதி முடிந்தவுடன் சிவாச்சாரியார்கள் புனித கலசத்தை தலையில் சுமந்தவாறு திருக்கோவிலை சுற்றி வந்து கோவில் மேல் அமைக்கப்பட்டுள்ள விமான கலசத்தில் சிறப்பு மந்திரங்கள் கூறி புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழாவை மிக விமர்சையாக நடத்தினர்.
பின்னர் மூலவர் ஸ்ரீகண்டி அம்மனுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


