in

KGF பட நடிகர் மறைவு


Watch – YouTube Click

KGF பட நடிகர் மறைவு

KGF படத்தில் நடித்ததின் மூலம் புகழ்பெற்ற கன்னட துணை நடிகர் தினேஷ் மங்களூர் திங்கள்கிழமை அதிகாலை காலமானார்.

63 வயதான நடிகர் தினேஷ் Brain Stroke பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், உடுப்பி மாவட்டம் குந்தாபூரில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 3.30 மணிக்கு காலமானார்.

கன்னட திரையுலகம் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலையும் அஞ்சலியையும்’ தெரிவித்துவருகின்றனர்.

கன்னட நடிகை சங்கீதா பட்: “உங்களை மிகவும் மிஸ் பண்ணுவோம், மிகவும் மகிழ்ச்சியான, திறமையான மற்றும் அன்பான நபர், மக்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்க எப்போதும் விரும்பிய ஒருவர்.

படப்பிடிப்புகளின் போது உங்கள் உடல்நலக் குறைவு நாட்களில் கூட நீங்கள் வலுவாக நிற்பதை நான் பார்த்தது நினைவிருக்கிறது, “எனது கடினமான நாட்களில் நீங்கள் எனக்கு உதவி இருக்கிறீர்கள், உங்கள் இனிமையான நகைச்சுவைகளால் என்னை சிரிக்க வைக்கத் தவறியதில்லை.

உங்கள் சினிமா Career பற்றியும் படப்பிடிப்பில் எங்கலுடன் நீங்கள் உரையாடியதையும் நான் எப்போதும் பொக்கிஷமாகக் கருதும் நினைவுகள். மிக விரைவில் மறைந்துவிட்டீர்கள் ,” என்று சங்கீதா பட் தனது இரங்கலைத் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

What do you think?

போற போக்க பார்த்த மதராசி கல்லா கட்டாது போல

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு மின்வாரியத்தை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்