செஞ்சி வட்ட நாடார் ஐக்கிய சங்கத்தின் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்ட நாடார் ஐக்கிய சங்கத்தின் சார்பிலும் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சங்க கட்டடத்தில் அமைந்துள்ள காமராஜர் முழு உருவ சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி கேக் வெட்டி மகிழ்ந்தனர்.
செஞ்சி வட்ட நாடார் ஐக்கிய சங்கத்தின் சார்பாக பெருந்தலைவர் கு.காமராஜர் அவர்களின் 123- ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை கேக் வெட்டி மிகசிறப்பாக கொண்டாடினர். முன்னதாக சங்க கட்டிடத்தில் உள்ள பெருந்தலைவர் திருஉருவ சிலைக்கு சங்க கொளரவத் தலைவர் பால்ராஜ் நாடார், முன்னாள் தலைவர் சேவியர் நாடார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டை சங்க தலைவர் சேசுதுரை நாடார், செயலாளர் ஜோசப் நாடார், பொருளாளர் செல்வானந்தம் நாடார், துணை தலைவர் சைமன்துரை நாடார் துணை செயலாளர் ரீகன் நாடார், ஜெரால்டு நாடார் ஆகியோர் செய்து இருந்தனர்.

முன்னால் தலைவர் கோஸ்கோ நாடார் அனைவரையும் வரவேற்றார் முன்னால் துணை தலைவர் செல்வம் (எ)இராஜகுமார் நாடார் நன்றியுரை யாற்றினார்.
நிகழ்ச்சியில் செஞ்சி வட்டார நாடார் ஐக்கிய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கர்மவீரர் காமராஜருக்கு மரியாதை செலுத்தினர்.


