கே பி ஒய் பாலா ஹீரோவானார்
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒவ்வொருவராக வெள்ளி துறையில் நடிகர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நிலையில் புதிதாக கே பி ஒய் பாலா ஹீரோவாக புரமோட்…ஆகி இருக்கிறார்.
இவர் யாருக்கு என்ன கஷ்டம் என்றாலும் உடனே சென்று உதவி செய்யும் வள்ளல் . ஷெரிப் இயக்கும் படத்தில் பாலா ஹீரோவாக கமிட்டாக இருக்கிறார் படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது .
இப்படத்தில் அறிமுக நாயகி நமிதா ஹீரோயின் ஆகவும் அர்ச்சனா, இயக்குனர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படத்தினை பற்றி வேறு எந்த தகவலையும் படக்குழுவினர் அறிவிக்கவில்லை.