ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தில் ஜீர்னோத்தாரண மகா கும்பாபிஷேகம்
பண்ருட்டியில் 300 ஆண்டுகளுக்குமேல் பழமைவாய்ந்த ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தில், ஜீர்னோத்தாரண மகா கும்பாபிஷேகம் மிக விமர்சியாக நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கொக்குபாளையம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணமூர்த்தி, முத்து வகரா விலை நிலத்தில் அமைந்துள்ள, 300 ஆண்டுகளுக்குமேல் பழமைவாய்ந்த ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தில், ஜீர்னோத்தாரண அஷ்டபந்தனமஹா கும்பாபிஷேகம் விழா, யாகசாலை பூஜைகளுடன் துவங்கி, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களுக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, புனித நீர் அடங்கிய கலசங்களை மேளதாளங்கள்முழங்க ஆலயத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, ஸ்ரீ மதுரை வீரன் விஸ்வரூப சிலை மற்றும் மூலவர் பெற்கலை அய்யனார் பூரணி, கன்னிமார்கள், குதிரை உள்ளிட சிலைகளுக்கு வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் மிக விமர்சியாக நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீ மதுரை வீரன் மற்றும் பெற்கலை அய்யனார் பூரணி, கன்னிமார்கள் உள்ளிட்ட மூலவர்களுக்கு பட்டாடை உடுத்தப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது.

இதில் கொக்குபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ மதுரை வீரன் விஸ்வரூப சிலையை தரிசித்து சென்றனர்.


