in

இரட்டணை ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய செடல் பிரம்மோற்சவ திருவிழா

இரட்டணை ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய செடல் பிரம்மோற்சவ திருவிழா

 

இரட்டணை ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய செடல் பிரம்மோற்சவ திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் இரட்டணை ஸ்ரீ வென்னியம்மன் ஆலய செடல் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு செடல் உற்சவம் கடந்த 23ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

நேற்று செடல் உற்சவம் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர், கார், பஸ், டிராக்டர் உள்ளிட்ட வாகனங் களை அலகு குத்தி இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தொடர்ந்து இரவு 10 மணியளவில் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் வீரபத்திரசாமியும் மற்றும் ஸ்ரீ வெண்ணியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

மேலும் மகா தீபாராதனை கும்பதீபம் பஞ்சமுக தீபாரதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வீரபத்திர சுவாமியும் மற்றும் ஸ்ரீ வெண்ணியம்மனும் கோயில் உட்பிரகாரம் வலம் வந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீ வெண்ணியம்மன் எழுந்தருளினார்.

 

தொடர்ந்து திருத்தேரில் இரட்டணை கிராம மாட வீதி வழியாக திருத்தேரோட்டம் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை இரட்டணை கிராம தேவதைகள் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

What do you think?

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றம்

குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் 7-வது நாளாக குளிக்க தடை