தன்ஷிகா விஷால் காதலுக்கு ரூட் போட்டவர் இவரா?
யோகி டா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நேற்று விஷால் தனது காதலியான சாய் தன்ஷிகா வை காதலிப்பதாக கூறி தனது பிறந்தநாள் அன்று திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தார்.
ஒரு படத்தில் கூட ஒன்றாக நடிக்காதவர்களுக்குள் எப்படி காதல் மலர்ந்தது என்ற சுவாரஸ்யமான விஷயம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
2017 ஆம் ஆண்டு தன்ஷிகா நடித்த விழித்திரை பட விழாவில் சிறப்பு விருந்தினராக டி ராஜேந்திரன் பங்கேற்றார். மேடையில் பேசிய தன்ஷிகா டி ராஜேந்திரன் பெயரை மட்டும் கூற மறந்து விட்டார் டென்ஷன் ஆன டி. ராஜேந்திரன் மேடையிலேயே திட்டி இருக்கிறார்.
அவர் மன்னிப்பு கேட்டு அழுதும் அவரை விடாமல் அநாகரிகமாக திட்டி இருக்கிறார் இதற்கு பல நடிகர்கள் கண்டனம் தெரிவித்தும் தன்ஷிகா…வுக்கு ஆதரவாகவும் பேசினர்.
அந்த விவகாரத்தில் அவருக்கு பக்கபலகமாக இருந்து அறிக்கை வெளியிட்டவர் நடிகர் விஷால். மேலும் தன்ஷிகாவின் பல பிரச்சினைகளை தீர்த்து வைத்தவர் விஷால்.
தன்ஷிகா வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது மலர்ந்த நட்புதான் தற்பொழுது காதலாக மாறி இருக்கிறது.


