in

தமிழ்நாட்டில் சைபர் க்ரைம் காவல்துறை என்று ஒன்று இருக்கிறதா???டாக்டர்.ராமதாஸ் பேட்டி

தமிழ்நாட்டில் சைபர் க்ரைம் காவல்துறை என்று ஒன்று இருக்கிறதா???டாக்டர்.ராமதாஸ் பேட்டி

 

தமிழ்நாட்டில் சைபர் க்ரைம் காவல்துறை என்று ஒன்று இருக்கிறதா??? சைபர் க்ரைம் ஜிரோ ஆகிவிட்டது:- ஒட்டு கேட்கும் கருவி யார் வைத்தார்கள் என்பது குறித்து இரண்டு, மூன்று நாட்களில் அம்பலமாகும்:- தைலாபுரத்தில் பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் பேட்டி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்
கடந்த ஆண்டுகளை விட மழைப்பொழிவு இந்தாண்டு அதிகம் என்ற தகவல் உள்ளதாலும், மழை காலம் நெருங்குவதால் நீர் வழி தடங்களில் உள்ள ஷட்டர் பழுதாகி கிடைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு பராமரிப்பில் 90 அணைகள் உள்ளன. பராமரிப்பு சரியாக இல்லாததல் மழை பொழிவின் போது ஆபத்தில் தள்ளிவிடும் தாமிரபரணி ஆற்றின் கட்டமைப்பு சேதமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஷட்டர்கள், சங்கிலிகள், ரப்பர்கள் பழுதடைந்துள்ளதால் வட கிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன் சரி செய்துவிட்டதால் பெரிய இழப்பிலிருந்து தப்பிக்கலாம்
சேதமடைந்துள்ளதை சீரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் தாமதிக்காமல் விடுவிக்க வேண்டும் என கூறினார்.

திருப்புவனம் அஜீத் மரன வழக்கில் காவல் துறையின் செயல்பாடுகளுக்கு நீதித்துறை அதிருப்தி தெரிவித்து கொண்டு தான் இருக்கிறது. காவல் துறை தனது போக்குகளை மாற்றி கொள்ள வேண்டும் சென்னை காவல் துறையை நீதியரசர் வேல்முருகன் எச்சரிக்கை செய்துள்ளார். சூளை மேட்டில் 92 சவரன் நகை கொள்ளை போன வழக்கில் 8 ஆண்டுகளாக காவல்துறையினர் தூங்கி கொண்டிருந்ததை நீதியரசர் கண்டித்ததுடன் கடமை தவறும் அதிகாரிகளை நீதித்துறை களையும் என நீதித்துறை நீதியரசர் எச்சரித்துள்ளார்.

காவல் துறையினருக்கு யோகா, மன, உடற்பயிற்சி செய்த பிறகு தவறிழைக்கிறார்கள் என்றால் அவர்கள் காவல் துறை பணிக்கே தேவையில்லை, சென்னையில் விம்கோ நகரில் ரயில் சிறைபிடிப்பு தான் நடக்கிறது புறநகர் ரயில்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கூறியும் ரயிலை சிறைபிடிக்கும் போரட்டத்தினை மக்கள் நடத்தியுள்ளனர். இது ரயில்வே துறையினரின் மெத்தனபோக்கை காட்டுகிறது. ரயில்வே துறையில் வடமாநிலத்தவர்கள் நியமிக்கபட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாநிலத்தவரை பணியில் நியமித்துள்ளதால் விபத்து மற்றும் காலதாமதம் பரிசாக கிடைக்கிறது.

இதனால் மத்திய அரசு கவனம் செலுத்தி மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் , கும்பிடிபூண்டி அருகே ஆயில் ரயிலில் ஏற்றி சென்ற எரிந்ததால் அப்பகுதியில் வசிக்கும் இருளர் சமூக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என வலியுறித்தினார். சென்னையில் 3 வயது குழந்தை காய்ச்சலால் உயிரிழ்ந்துள்ளார். அருகிலுள்ள மாநிலத்தில் நிபா காய்ச்சல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் பொதுமக்கள் குறைகளை மனுக்களாக பெறுவது நல்லது தான் ஆனால் 6 மாதத்திற்கு முன் இது துவங்கி இருக்க வேண்டும்
நான்கு மணி நேரத்தில் முதலமைச்சர் முகாமில் பெண்ணின் குறை தீர்க்கப்படுகிறது என்றால் அது பெருமை இல்லை சிறுமை தான்

மருத்துவர்களுக்கான விழாவில் திருக்குறளில் இல்லாத ஒரு திருக்குறளை ஆளுநர் கேடயத்தில் வழங்கியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ் 1330 குறளை மீறி 1331 வது எழுதுயிருக்கிளார்களா நல்ல வேடிக்கைதான் என கூறினார்.

பாமக தேர்தல் களத்தில் தான் இருக்கிருபதாகவும், மகளிர் மாநாட்டிற்கான துண்டு பிரசுரத்தில் அன்புமணி பெயர் படம் இல்லை என்ற கேள்விக்கு கட்சி விளம்பரத்தில் வரும், வரலாம் என்றும் அழைப்பு விடுக்கப்படும் அவர் வரலாம் வராமலும் போகலாம் என தெரிவித்தார்.

ஒட்டு கேட்பு கருவி தொடர்பாக விசாரனை நடைபெற்று வருகிறது ஒட்டு கேட்கும் கருவி யார் வைத்தார்கள் யார் சொல்லி வைத்தார்கள் என விசாரனை நடைபெறுவதால் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அம்பலத்திற்கு வரும் என தெரிவித்தார்.

விசாரனை செய்தது சைபர் கிராமா என்ற கேள்விக்கு தமிழகத்தில் சைபர் கிரைம் சைபராகி இப்பொழுது மைனசுக்கு போய் விட்டார்கள் தமிழநாட்டில் சைபர் கிரைம் என்ற அமைப்பு இருக்கிற மாதிரி தெரியலையே என கூறினார்.

விழுப்புரத்தில் வரும் 20ஆம் தேதி வன்னியர் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து போக போக தெரியும் என பாடலாக பாடி தெரிவித்தார்.

What do you think?

சிவில் துறை சார்பில் பயிலரங்கம் பேராசிரியர்கள் தொழில் துறையினர் பங்கேற்பு

பாமக சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர் சந்திப்பு