புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடம் மற்றும் அங்கன்வாடி மையக் கட்டிடம் திறப்பு விழா
நாகை அருகே கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடம் மற்றும் அங்கன்வாடி மையக் கட்டிடம் திறப்பு விழா: அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்த மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் எம்எல்ஏ வி.பி. நாகை.மாலி
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரம் ஊராட்சியில் உள்ள தூய செபஸ்தியார் உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகை மாலி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் மற்றும் பாலக்குறிச்சி ஊராட்சி ஓட்டத்தட்டையில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் ரூ 17 லட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் 24 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டன.
இந்நிலையில் அதனை நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை.மாலி ஆகியோர் திறந்து வைத்தனர். குத்துவிளக்கு ஏற்றி வைத்து, குழந்தைகளை கவரும் வகையில் சுவற்றில் வரையப்பட்ட ஓவியங்களை பார்வையிட்டனர்.

தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்வில் அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


