in

மயிலாடுதுறையை அடுத்த மல்லியத்தில் ஜாமிஆ மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

மயிலாடுதுறையை அடுத்த மல்லியத்தில் ஜாமிஆ மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மல்லியத்தில் ஜாமிஆ மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி முகம்மது அலி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலமா சபை தலைவர் காஜா முயீனுத்தீன், தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ.மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார்,அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ்,முன்னாள் ஒன்றிய தலைவர் மூவலூர் மூர்த்தி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.

பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு 8,000-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு வெள்ளிக்கிழமை சிறப்பு ஜிம்மா தொழுகையில் ஈடுபட்டனர் தொடர்ந்து அனைவருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

What do you think?

பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தை வெள்ளி மற்றும் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தொகுதி பங்கீடு முடிவதற்குள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.