கேப்டன் பிரபாகரன் படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்
ஆர்கே செல்வமணி இயக்கத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 1991 ஆம் ஆண்டு நடித்த கேப்டன் பிரபாகரன்..
விஜயகாந்தின் 100வது படம், ஒரு மெகா வெற்றி படமாக மாறியது.. சரத்குமாருக்கு அறிமுகம் கிடைத்த படம் கேப்டன் பிரபாகரன்.
ரூபினி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
விஜயகாந்தின் பிறந்த நாளை ஒட்டி டிஜிட்டல் முறையில் August 22…ஆம் தேதி மீண்டும் Rerelease செய்யப்படுகிறது…..இப்படம் உருவான பசுமையான நினைவுகளை பற்றி படத்தின் டைரக்டர் R.K. செல்வமணி பகிர்ந்ததாவது.
இந்த படத்திற்காக நான் வீரப்பனை நேரடியாகவே சந்தித்து பேசி இருக்கிறேன் அவரிடம் உள்ள தொலைநோக்குப் பார்வை என்னை வியக்க வைத்தது மனித நடமாட்டத்தை பறவைகள், விலங்குகளின் சத்தம் மூலம் அறிவார்.
ஒழுக்கத்திற்கு பெயர் போனவர், காவல் தெய்வமாக அந்த கிராமத்து மக்களுக்கு இருந்தார். தனது ஆட்களாக இருந்தாலும் கிராமத்து பெண்களிடம் தவறாக நடந்தால் அவர்களை தண்டிக்க தயங்க மாட்டார்.
வீரப்பன் சுமார் 30000 சந்தன மரங்களை வெட்டியுள்ளார். ஏற்கனவே 15000 Load..களை லாரியில் கொண்டு சென்று இருக்க வேண்டும் மரங்கள் எல்லாம் எங்கே போனது வெளியே இருபவர்கள் சப்போர்ட் இல்லாமல் இது சாத்தியம் இல்லை அவரை இயக்கிய மூளை வெளியே தான் இருக்கிறது.
எந்த பெண்ணையும் வீரப்பன் தொட்டதும் கிடையாது. கெட்டவனாக வெளியில் வீரப்பன் சித்தரிக்கப்பட்டாலும் அவர் நல்ல குணம் படைத்த வல்லவராக வாழ்ந்திருக்கிறார்.
வீரப்பனை பார்த்து தான் கேப்டன் பிரபாகரன் படத்தில் மன்சூர் அலிகான் கதாபாத்திரத்தை நான் சித்தரித்தேன்.
வீரப்பன் உயிரோடு பிடிபட்டிருந்தால் பல குற்றவாளிகள் மாட்டியிருப்பார்கள் அவரை உயிருடன் பிடிக்க முடியாது என்பதற்காக ஸ்கெட்ச் போட்டு அவரை காலி பண்ணிடாங்க நடந்த உண்மை இது தான் என்று முடித்திருக்கிறார் R.K.செல்வமணி.


