சினிமாவிற்காக வங்கி பணியை விட்டுவிட்டேன்
திருவள்ளுவர் வாழ்க்கையை மையமாக வைத்து திருக்குறள் என்ற திரைப்படத்தை இயக்கியவர் ஏஜே பாலகிருஷ்ணா தற்பொழுது திருவள்ளுவர் திரைப்படம் வெள்ளி திரையில் வெளியாக இருக்கும் நிலையில் அப்படத்தில் வள்ளுவராக கலைச்செல்வம், வாசுகி ஆக தனலட்சுமி நடித்திருக்கின்றனர்.
படத்தில் பரிதி என்ற கதாபாத்திரத்தில் குணா பாபு என்பவர் நடித்திருக்கிறார். அவரின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் ஈர்த்த நிலையில் தற்போது இவர் ரிவால்வர் ரீட்டா, Mareesan உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
மலையாளத்திலும் கமிட் ஆகியிருகிறார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனது சிறு வயது ஆசையானால் சூழ்நிலை காரணமாக வங்கி வேலையில் சேர்ந்து’ மேனேஜராக பணியாற்றினேன் ஒரு கட்டத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்ததும் வங்கி பணியை விட்டுவிட்டு சினிமாக்கு வந்து விட்டேன் என் கனவுகளை அடைய நான் எதிர் கொண்ட போராட்டங்கள் அதிகம் அழைப்பு வரும் வரை உழைப்பு அவசியம் என்பதை உணர்ந்து வேலை செய்தேன் என்னால் முடிந்த அளவிற்கு சினிமாவுக்கு என் பங்களிப்பை தருவேன் என்று குணா பாபு கூறியுள்ளார்.


