களைக்கொல்லி மருந்தை தமிழகத்தில் முதன்முறையாக நெல்லையில் அறிமுகப்படுத்தினர்
மக்காசோளப் பயிரில் ஏற்படும் களைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் கோத்ரேஜ் நிறுவனம் பிரத்யோகமாக கண்டுபிடித்துள்ள களைக்கொல்லி மருந்தை தமிழகத்தில் முதன்முறையாக நெல்லையில் அறிமுகப்படுத்தினர்.
இந்தியாவில் மக்காச் சோள விவசாயிகள் எதிர்கொள்ளும் பெரிய சவாலன பிரச்சனை புற்கள் மற்றும் அகன்ற இலைகளைக் கொண்ட களைகளாகும். இந்த களைகளை திறம்பட கட்டுப்படுத்தும் நோக்கில் ஜப்பான் நாட்டுடன் இணைந்து கோத்ரேஜ் நிறுவனம் பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, களத்தில் சோதனை செய்து வெற்றிபெற்ற நிலையில் மக்காச் சோள பயிர்களின் இடையே ஏற்படும் களைகளை கட்டுத்தும் பிரத்தியோகமான கோத்ரேஜ் அக்ரோவ்ட் அஷிடாக் என்ற களைக்கொல்லி மருந்தை கண்டுபிடித்துள்ளது.
களைக்கொல்லி மருந்தின் அறிமுக விழா தமிழகத்தில் முதல் முறையாக நெல்லையில் நடைபெற்றது. நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்த விழாவில் கோத்ரேஜ் அக்ரோவெட்டின் பயிர் பாதுகாப்பு வணிகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜவேலு அறிமுகப் படுத்தினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் புதுமையான ,ஆராய்ச்சி சார்ந்த தீர்வுகளை வழங்குவதே எங்கள் நோக்கம் மக்காச்சோள விவசாயிகள் உற்பத்திதிறனை அடைவது என்பது மிகவும் முக்கியமானது.
இதனைக் கருத்தில் கொண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் அதிலும் குறிப்பாக அஷிடாக் களைக்கொல்லியை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த களைக்கொல்லி இரண்டு முதல் நான்கு இலைகளை கொண்ட கலைகள் மற்றும் அகன்ற இலைகளை கொண்ட கலைகளை ஆரம்பத்திலே கட்டுப்படுத்த உதவுகிறது.
ஒரு ஏக்கருக்கு 400 மில்லி கரப்பான் உடன் 50 மில்லி சரியான அளவு களைக்கொல்லியை பயன்படுத்தி தெளிக்க வேண்டும். இந்த புதிய களைக்கொல்லி களை தொடர்பான மகசூல் இழப்புகளை குறைக்க உதவுகிறது. இதற்கான விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. விவசாயிகளுக்கு பயனுள்ள புதிய களைக்கொல்லியாக இருக்கும் என தெரிவித்தார்.