கார் ரேஸில் கலந்து கொள்வதற்கு இவர் தான் காரணம்
நடிகர் அஜித்குமார் தற்போது ஐரோப்பியாவில் நடைபெற்று வரும் GT4 கார்ப்பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்றுள்ளார் .
இரண்டாவது சுற்றின் போது அவரது கார் டயர் வெடித்ததால் அதிர்ஷ்டவசமாக விபத்திலிருந்து தப்பினார்.
நடிகர் அஜித்குமார் 17 வயதில் இருந்தே கார் ரேஸ்..இல் பங்கு கொள்வதாக கூறியிருந்தார் 1990 ஆம் ஆண்டு இரண்டு மணி நேர கார் ரேஸில் பங்கேற்று ஐந்தாம் இடத்தை பிடித்ததாகவும் அப்பொழுது சுபாஷ் சந்திர போஸ் என்பவர் அவரை உற்சாகபடுத்தி தொடர்ந்து கார் ரேஸில் பங்கேற்குமாறு அறிவுறுத்தியதால் நடிகர் அஜித் குமார் கார் ரேஸில் கலந்து கொள்கிறாராம்’.
கார் ரேசிர்க்காக தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தியவரிடம் பெற்றோர்கள் எங்களால் உனக்கு செலவு செய்ய முடியாது அதனால் உனக்கான ஸ்பான்சரை நீயே தேடிக் கொள் என்று கூற சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
பெற்றோர்கள் மட்டுமல்ல எனது லட்சியத்திற்கு சினிமாவும் உறுதுணையாக இருந்தது என்று கூறியுள்ளார். ஏன் நீங்கள் Race…சை பற்றி மட்டும் அதிகம் பேட்டியளிக்கிறீர்கள் என்ற கேள்வி ..இக்கு கார் ரேஸ் பற்றி மக்கள் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக என்று கூறினார்.


