பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா
பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கல்லூரி சேர்மன் டாக்டர் ஜேக்கப் வரவேற்க, கல்லூரியின் முதல்வர் டாக்டர் ரேணு ஆண்டறிக்கை வாசிக்கையில், மருத்துவ கல்வி மற்றும் ஆய்வுகள், மேலும் நோயாளிகளுக்கு தரப்படும் சிகிச்சை மற்றும் மாணவ மாணவிகள் தனித்திறன் மேம்பாடு குறித்து குறிப்பிட்டார்.
பதிவாளர் டாக்டர் அனில் பூர்த்தி சிறப்பு விருந்தினரை வரவேற்று அறிமுக உரை ஆற்றினார். பின்னர் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் தலைமையில் மாணவ மாணவிகள் மருத்துவத்திற்கு தம்மை அர்பணித்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பிரகாஷ் பாபு கலந்து கொண்டு இளங்கலை மருத்துவம் பட்டம் பெற்ற 2019 ஆண்டு பிரிவு 147 மாணவ மாணவிகளுக்கும் மற்றும் 2021 பிரிவு முதுகலை மருத்துவபட்டம் பெற்ற 43 மாணவ மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கி பேசுகையில்,
மருத்துவம் என்பது உன்னதமானது.சமுதாயத்திற்கு தங்களை அர்ப்பணித்து பணியாற்ற வேண்டும், மற்றும் மருத்துவத்துவ துறையில்
எ.ஐ (A.I) போன்ற அதிநவீன செயற்கை தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
சிறந்த இளங்கலை பிரிவு மாணவராக தேர்வு செய்யப்பட்ட டாக்டர் சுஜித் அவர்களுக்கு தங்க பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டார். மேலும், சிறந்த ஆல்ரவுண் -டரருக்கான தங்க பதக்கம் மாணவி சாரா கேத்ரின் அவர்களுக்கும், சிறந்த விளையாட்டு வீரருக்கான தங்க பதக்கத்தினை மாணவி ராகப்ரியாவும் பெற்றனர்.
இளங்கலை துணை முதல்வர் டாக்டர் நிஷாந்த் முதுகலை துணை முதல்வர் டாக்டர் ஸ்டாலின் பட்டமளிப்பு விழாவை ஒருங்கிணைத்தனர். கூடுதல் டாக்டர் துணை முதல்வர் சுஜாதா அனைத்து பாட பிரிவிலும் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கான பரிசு வழங்கிய நிகழ்வினை ஒருங்கிணைந்தார்.
ஆய்வில் சிறந்து விளங்கிய 13 பேருக்கு விருது வழங்கும் நிகழ்வை கூடுதல் துணை முதல்வர் டாக்டர் அபர்ணா ஒருங்கிணைத்தார். சிறந்த ஆய்வு கட்டுரைகள் வெளியிட்ட பிம்ஸ் மருத்துவர்களுக்கான நிகழ்வை கூடுதல் மருத்துவ கல்வி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சிவா ஒருங்கிணைத்தார்.
விழாவில் பிம்ஸ் மருத்துவமனை பொது நிர்வாக மேலாளர் ஜார்ஜ் தாமஸ் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பேராசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவ கல்வி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நாயர் இக்பால் நன்றி கூறினார்.