in

மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மருத்துவர்கள் வேட்டி-சட்டை பட்டுப்புடவையில் வந்து அசத்தல்

மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மருத்துவர்கள் வேட்டி-சட்டை பட்டுப்புடவையில் வந்து அசத்தல்.

 

புதுச்சேரி மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தமிழ் பாரம்பரியத்தை பின்பற்றிய மருத்துவர்கள் வேட்டி-சட்டை பட்டுப்புடவையில் வந்து அசத்தல்.

புதுச்சேரியின் மதகடிப்பட்டில் இயங்கி வரும் ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியின் 9-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.

துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன் தலைமையில் நடந்த விழாவில் பட்டம் பெற வந்த மருத்துவ மாணவ-மாணவியர் தமிழ் பாரம்பரிய உடையில் வந்து அசத்தினார்கள்.

விழாவில் பங்கேற்ற துணைநிலை ஆளுநர் பட்டு வேட்டி- சட்டையில் பங்கேற்றார். இதேபோல் விழா மேடையில் அமர்ந்து இருந்தவர்களும் பேராசிரியர்களும் பாரம்பரிய உடைகளில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஸ்ரீ கமல சாய்பாபா ஆலயத்தில் 23ஆம் ஆண்டு 108 கலசபிஷேக விழா