முன் விரோதம் காரணமாக இளைஞரை அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிய கும்பல்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி கபடி விளையாட்டு வீரரான இவர் அதை ஊரைச் சேர்ந்த இளைஞர்களுடன் கபடி விளையாடிய போது ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இரு தரப்புக்கும் பிரச்சனை இருந்து வந்தது
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஊரை சேர்ந்த விஷ்ணு, முத்துச்செல்வன், பிரவீன் குமார் உள்ளிட்ட 15 இளைஞர்கள் கபடியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கொலை செய்யும் நோக்கத்தோடு அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தங்கப்பாண்டியை தாக்கி உள்ளனர்
இதில் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த தங்கப்பாண்டி தன்னை தாக்கிய நபர்கள் மீது ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதில் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தங்கப்பாண்டி வீட்டிற்கு வந்த இளைஞர்கள் தங்கள் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற கோரி கொலை மிரட்டல் விட்டுச் சென்றதாக தங்கப்பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்
தன்னைத் தாக்கிய 15 நபர்களில் முக்கிய குற்றவாளிகளை பிடிக்காமல் ஜெயமங்களப் போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகும் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளித்து தன்னை தாக்கிய நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட நபரின் தாயார் புகார் அளித்துள்ளார்


