விநாயகர் சிலைகள் ஊர்வலமாக காவிரி ஆற்றின் நீரில் கரைப்பு
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு பிறகு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காவிரி ஆற்றின் நீரில் கரைப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா குத்தாலத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்து வழிபட்ட சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.
குத்தாலம் சுற்றி உள்ள பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு மேளதாள வாத்தியங்கள் வான வேடிக்கைகள் முழங்க பாஜக மயிலாடுதுறை மத்திய ஒன்றிய தலைவர் TDK செந்தில் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

குத்தாலம் தேரடியில் கடைவீதியில் தொடங்கி ஊர்வலமாக குத்தாலம் கடைவீதி வழியாக வந்து காவிரி தீர்த்த படித்துறையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
இதில் இந்து முன்னணியினர் பாரதிய ஜனதா கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் ஒன்றிய பொதுச் செயலாளர் கணேஷ் செய்திருந்தார்.


