in

நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி பாட்டி மறைந்தார்


Watch – YouTube Click

நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி பாட்டி மறைந்தார்

நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி வயது மூப்பு காரணமாக காலமானார்.

ஏழு வயதில் தானே மெட்டமைத்து வாய்க்கு வந்ததெல்லாம் பாடி Famous ஆனவர்.

14 வயதில் இவரின்’ அத்தை மகன் செல்லையா,..வை திருமணம் செய்தார். இவருக்கு பக்கபலமாக இருந்து ஊக்கப்படுத்தி கலைமாமணி விருது வாங்க காரணமாக இருந்தவர் அவரது கணவர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கலைமாமணி விருது வழங்கிய போது உங்களுடைய ஆசை என்னவென்று கேட்டார், எங்கள் ஊரில் ஒரு அரசு பள்ளி வேண்டும் என்று கோரிக்கை வைக்க. உடனே அவரது ஆசை நிறைவேற்றபட்டது.

மதுரையில் நடந்த Rerecording ..க்காக கணவருடன் சென்ற பொழுது எதிரே வந்த லாரி இவரது கணவரை மோதியதால் சம்பவ இடத்திலேயே மறைந்தார்.

இவர்களுக்கு குழந்தை இல்லாததால் இவரின் அக்கா மகள் தான் இவரை கவனித்து வந்தார் அவரும் கார் ஆக்சிடெண்டில் மறைந்து போக அவருடைய மகள் வாசுகி இவரை கவனித்து வந்தார்.

பாண்டியராஜன் இயக்கத்தில் ஆண் பாவம் படத்தில் முதன் முதலில் நடித்திருக்கிறார்.

பாண்டியராஜன் பல படத்தில் இவருக்கு சான்ஸ் கொடுத்திருக்கிறார். கடைசியாக சசிகுமாரின் காரி படத்தில் நடித்திருந்தார்.

கணவர் இருக்கும் பொழுது வசதியாக வாழ்ந்த இவர் கூரை வீட்டில் இடிந்த சுவரக்கிடையில் கடனாளியாக கடைசி காலத்தை நகர்த்தி இருக்கிறார்.

சினிமா துறையில் இவருக்கு வாய்ப்பும் உதவியும் கொடுக்காத காரணத்தினால் வறுமையில் வாழ்ந்த இவருக்கு பாண்டியராஜன் உதவி செய்திருக்கிறார்.

விஷால் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற போது இவருக்கு பண உதவி வழங்கியதால் கஷ்டத்திலிருந்து மீண்டு இருக்கிறார்.

விஷாலை பேரன் என்று கூறும் இவரின் கடைசி ஆசை. தனது பேரன் விஷாலின் திருமணத்தை நான் பார்க்க வேண்டும் என்பதுதான் . 99 வயதாகும் கருப்பாயி பாட்டி வயது மூக்கு காரணமாக இன்று காலை 8 மணி அளவில் மறைந்தார் இவருடைய இறுதி சடங்கு நாளை கொல்லங்குடியில் நடைபெறுகிறது.

What do you think?

நயன்தாராவிற்கு பிடித்த சீரியல்

ராஜா சாப் படத்தின் Teaser இணையத்தில் கசிவு