in

நெல் மூட்டைகளை மழைநீர் சூழ்ந்ததால் விவசாயிகள் வேதனை

நெல் மூட்டைகளை மழைநீர் சூழ்ந்ததால் விவசாயிகள் வேதனை

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை மழைநீர் சூழ்ந்ததால் விவசாயிகள் வேதனை, கொள்முதலை அதிகப்படுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீர் மற்றும் மழை நீரை பயன்படுத்தி 99 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி. தற்பொழுது சாகுபடி பணிகள் நிறைவடைந்து விவசாயிகள் அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் 140 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காரிப் பருவத்தில் புதிய விலை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி கொள்முதல் பணிகள் நிறுத்தப்பட்டு மீண்டும் ஒன்றாம் தேதி கொள்முதல் துவங்கியது.

ஆனால் போர்டல் ஆன்லைன் பிரச்சினை காரணமாக இரண்டு நாட்களாக நெல் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் தொடர்ந்து எட்டாவது நாளாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஐந்தாயிரம் மூட்டைகள் தேக்கமடைந்து இருந்தன.

இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகளை சுற்றி மழை நீர் சேர்ந்துள்ளது. தற்பொழுது 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ள நிலையில், நெல்மணிகள் மழையில் நனைந்த காரணத்தால் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமும் 700 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யும் நிலையில் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் ஐந்தாயிரம் மூட்டைகளுக்கு குறையாமல் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது.

மழையை கருத்தில் கொண்டு 20% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் தினமும் 1500 நெல் முட்டைகள் ஆவது கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

புதுச்சேரி அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 335-ம் ஆண்டு கொடியேற்ற விழா

மத்திய அரசு தபால் துறை ஊழியர்களுக்கு 8வது ஊதிய குழுவை விரைவில் அமைக்க வலியுறுத்தல்