எல்லை காளியம்மன் கோயில் பாலகுட ஊர்வலம்
சிதம்பரம் லால்புரம் மெயின்ரோட்டில் உள்ள ஶ்ரீ தில்லை எல்லை காளியம்மன் கோயில் பாலகுட ஊர்வலம் மற்றும் அபிஷேக, ஆராதானை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எல்லை காளியம்மன் கோயில் 26வது ஆண்டு ஆவணி திருவிழா ஆக.15-ம் தேதி காப்பு கட்டுதலுடன் உற்சவம் தொடங்கியது. தினமும் அம்பாள் வீதி உலா நடைபெற்றது.
ஆக.17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 500 மகளிர் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடைபெற்றது. நிறைவில் எல்லைகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆர.18-ம் தேதி திங்கள்கிழமை மஞ்சள் நீராட்டு விழா, திரு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை டிரஸ்ட் சக்தி மதியழகன், சக்திசுதன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


