எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுத்து முதல்வர் ஆகவில்லை. அதனால் அவருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. – டீக்கடை, பெட்டிக்கடை லைசென்ஸ் வாங்க திமுக அரசு கூறுகிறது என எடப்பாடி கூறியதற்கு அமைச்சர் ஐ. பெரியசாமி பதில்
1958 இல் பஞ்சாயத்து சட்டத்தில் டீக்கடை உரிமம் பெற வேண்டும் என உள்ளது. எடப்பாடி ஆட்சி காலத்திலும் இது வசூல் செய்யப்பட்டது – அமைச்சர் ஐ பெரியசாமி
1958 பஞ்சாயத்து சட்டத்தின்படி டீக்கடை அனுமதியில் அபாயம் மற்றும் குற்றம் என்று இருந்தது தற்போது இதனை வியாபாரம் என மாற்றியுள்ளோம் – அமைச்சர் ஐ பெரியசாமி
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல்களுக்காக மாணவர் சிறப்பு குறை தீர்வு முகாம் மற்றும் திண்டுக்கல் கல்வி அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷாராணி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
பின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது,
“உயர்கல்வி படிக்க முடியாத அனைவரும் இன்று நடைபெறும் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். இந்த திட்டம் நல்ல வளர்ச்சி பெறும்.
மத்திய அரசை விமர்சித்து ஓபிஎஸ் பேசியது குறித்த கேள்விக்கு
ஓபிஎஸ் எடப்பாடி மத்திய அரசை கண்டிக்கப் போவதில்லை. தேர்தல் வரவுள்ளதால் கண்டனங்களை தெரிவிக்கின்றனர்.
பின் பிரதமர் மோடியை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் மோடியை பார்ப்பதற்காக முதலமைச்சருக்கு நேரம் ஒதுக்கி இருப்பதாக கூறியிருந்தனர். வரிசையில் நின்று பார்ப்பவர்களை பார்ப்பது போல் பார்த்து விட்டு சென்றார்.
சட்டபூர்வமாக நமக்கு வரக்கூடிய கல்வி உதவித் தொகை வரவேண்டும். கல்வி உதவித் தொகையை கொடுக்காமல் நிறுத்துவதற்கு அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
கிராமத்தில் உள்ள டீக்கடை பெட்டிக்கடை அனைத்திற்கும் லைசன்ஸ் வாங்க வேண்டும் என திமுக அரசு கூறுகிறது என்று எடப்பாடி கூறியது குறித்த கேள்விக்கு
“திமுக அரசு லைசன்ஸ் வாங்க கூறவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுத்து முதல்வர் ஆகவில்லை. அதனால் அவருக்கு தெரிய வாய்ப்பு இல்லை.
1958க்கு முன் சாதாரண டீக்கடைக்கு லைசன்ஸ் கிடையாது.
1958 க்கு பின்பு இந்த சட்டம் உள்ளது. அதன் பின்பு 1994ல் இந்த சட்டம் திருத்தப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்திலும் பஞ்சாயத்து யூனியனில் இருந்து வசூல் செய்து கொண்டு தான் இருந்தார்கள்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு பஞ்சாயத்து யூனியன் சட்டம் பற்றி தெரியவில்லை.
திமுக அரசு இதில் நன்மை செய்து உள்ளது. 1958இல் பஞ்சாயத்து யூனியன் சட்டத்தில் டீக்கடை அனுமதியில் ஆபத்து மற்றும் குற்றம் என்று இருந்தது. டீக்கடை ஆரம்பித்தால் குற்றம் என்று இருந்தது.
நான் அமைச்சர் ஆன பின்பு அபாயகரம், குற்றம் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு. வியாபாரம் என மாற்றப்பட்டது.
3,45,000 நபர்கள் 1958இல் இருந்து லைசன்ஸ் பணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு ஆண்டிற்கு 24 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது.
அவர் ஆட்சி காலத்திலும் இருந்தது. புதிதாக நாங்கள் எந்த வரியும் போடவில்லை.
வியாபார உரிமம் என டீக்கடை ரூ.250 கட்டினால் மூன்று வருடத்திற்கு அதனை வைத்துக் கொள்ளலாம். இது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
டீக்கடை வைப்பது குற்றம் என்ற வார்த்தையை எடுத்துள்ளோம்.
டீக்கடை மீது யாரும் வழக்கு போட்டால் நாளை அவர்கள் ஜெயிலில் இருக்க வேண்டும்.
முன்பு இருந்தவர்கள் டீக்கடையில் பாய்லர் வைத்திருந்தால் அது வெடித்து இறப்பதற்கான வாய்ப்பு உள்ளது. என்பதினால் ஆபத்து மற்றும் குற்றம் என்று வைத்திருந்தனர். அதை தற்போது மாற்றி இருக்கிறோம்.
1958ல் இருந்த சட்டம் தற்போது வரை உள்ளது. ஆனால், சொற்களை மாற்றி இருக்கிறோம்.
ஓராண்டு என்பதை மூன்றாண்டு என்று தற்போது திமுக அரசியல் தான் மாத்தியுள்ளது. சலுகை தான் வழங்கியுள்ளது.
டீக்கடைகளை எந்த அதிகாரிகளும் சென்று தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காகவே தற்போது இதை மாற்றி அமைத்துள்ளோம்.
பழைய ஓய்வூதிய திட்ட ஆசிரியர்களை, பங்களிப்பு ஓய்வூதியத்திற்கு திமுக அரசு கட்டாயப்படுத்துகிறது என்று ஓபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு
யாரையும் இந்த அரசு கட்டாயப்படுத்தாது.
நம்முடைய முதலமைச்சர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என நினைத்து வருகிறார்.
மத்திய அரசின் நடவடிக்கைகளை பார்க்கிறீர்கள். கல்விக்கு வரக்கூடிய பணத்தை கொடுக்காமல் அடம் பிடிக்கவில்லை. ஆனால் நமது முதல்வர் தாராளமாக இருக்கிறார். அரசு ஊழியர்கள் ஆசிரியர் பெருமக்களுக்கும்
அவர்கள் ஓய்வூதியத்தை அவர்களின் ஆலோசனை பெற்று வழங்கிட தயாராக இருக்கிறார்.
பிரச்சனைகளை அனைவரிடமும் கலந்து பேசி முடிவு எடுக்கின்ற ஒரே முதலமைச்சர் நமது ஸ்டாலின் மட்டுமே.


