சாலையோரம் தூங்கிய டிரைவர் உடல் நசுங்கி பலி.
வானகரத்தில் சாலையோரம் தூங்கிய கேரவன் வாகன டிரைவர் மீது டாராஸ் லாரி ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பலி.
திருவேற்காடு நகராட்சி சாலை பணிக்காக தாறு கலவை ஏற்றி வந்த லாரி ஏறி இறங்கியதில் உயிரிழந்த சோகம். ஓட்டுனர் தப்பி ஓட்டம் – போலிஸ் வலை.
மதுரவாயல் அடுத்த வானகரம் புளியம்பேடு அருகே உள்ள சாலையை ஒட்டிய பகுதியில் கேரவன் வாகன ஓட்டுனர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி(38) என்பவர் நேற்று இரவு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது திருவேற்காடு நகராட்சி சாலை பணிக்காக தாறு கலவைகளை ஏற்றிக்கொண்டு வந்த டாராஸ் லாரி வாகனம் சாலையோரத்தில் படுத்து கொண்டிருந்த ஓட்டுநர் மீது தெரியாமல் ஏற்றியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கேரவன் வாகன ஓட்டுனர் உடல் நசுங்கி பலியானார். இதில் டாராஸ் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த வானகரம் போலீசார் இறந்த நிலையில் கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய ஓட்டுனரை தேடி வந்த நிலையில், அவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையோரத்தில் தூங்கி இருந்த நபர் மீது கவனிக்காமல் லாரி ஏறி இறங்கி உடல் நசுங்கி ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


