தமிழ்நாட்டு அரசியல்ல இப்போ ஒரு புது ‘மைக்’ மேட்டர் பயங்கரமா வெடிச்சிருக்கு.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை இழுத்து ஒரு பொதுக்கூட்டத்துல பேசினதுதான் இப்போ கோலிவுட்ல பெரிய புயலையே கிளப்பிருக்கு!
சென்னையில நடந்த ஒரு போராட்டத்துல பேசின சி.வி.சண்முகம், “அப்துல் கலாம் கனவு காணச் சொன்னாரு..
ஸ்டாலின் ஒரு படி மேலே போய் உங்க கனவை சொல்லுங்க நிறைவேத்துறேன்னு சொல்றாரு. இப்போ எனக்கு நயன்தாரா வேணும்னு நான் கனவு கண்டா, ஸ்டாலின் அதை செஞ்சு கொடுப்பாரா?” அப்படின்னு நக்கலா கேட்டிருக்காரு.
இந்த வீடியோ சோசியல் மீடியாவுல பரவினதும், நயன்தாரா ரசிகர்கள் மட்டுமில்லாம பொதுமக்களும் “என்ன இப்படிப் பேசிட்டாரே?”னு ஷாக் ஆகிட்டாங்க.
இந்த விவகாரத்தை கையில் எடுத்த தென்னிந்திய நடிகர் சங்கம், சி.வி.சண்முகத்துக்கு ஒரு ‘தடிமனான’ கண்டன அறிக்கையை அனுப்பியிருக்காங்க.
அதுல அவங்க கேட்டிருக்கிற கேள்விகள் ஒவ்வொன்னும் செம ஷார்ப்!
ஒரு பொறுப்பான பதவியில இருக்குற நீங்க, ஒலிபெருக்கி முன்னாடி நின்னு ஒரு பெண்ணைப் பத்தி இப்படி கேவலமா பேசுறது என்ன மாதிரியான அரசியல் நாகரிகம்?
அப்துல் கலாம் சொன்ன கனவுங்கிறது ஏழையோட வீடு, விவசாயி மகனோட படிப்பு, பெண்களோட வேலைவாய்ப்பு..
ஆனா உங்க கனவு இப்படிவா இருக்கு? இதை வெளிய சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லையா? உங்க கட்சித் தலைவி ஜெயலலிதா அம்மையார் ஒரு பெண் சிங்கமா அரசியல்ல இருந்தாங்க.
அவங்ககிட்ட இருந்தா இதைக் கத்துக்கிட்டீங்க? இல்ல உங்க தலைமை இதை ஆமோதிக்குதா?கடைசியா நடிகர் சங்கம் ஒட்டுமொத்தமா ஒரு குரல்ல என்ன சொல்லிருக்காங்கன்னா, “நீங்க உடனே மன்னிப்பு கேட்கணும். இனிமே சினிமா துறையைச் சேர்ந்த பெண்களைப் பத்தி மரியாதை இல்லாம பேசமாட்டேன்னு கேரண்டி கொடுக்கணும்”னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க.
ஒரு பக்கம் நயன்தாரா ரசிகர்கள் சி.வி.சண்முகத்தை வறுத்தெடுத்துட்டு இருக்க, நடிகர் சங்கத்தோட இந்த லேட்டஸ்ட் அறிக்கை இப்போ அதிமுக வட்டாரத்துலயும், சினிமா வட்டாரத்துலயும் ஒரு பெரிய அதிர்வலையை உண்டாக்கியிருக்கு!

