in

தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை : பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை : பிரேமலதா விஜயகாந்த்

 

தேமுதிக இன்னும் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்யவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் நினைவிடத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மரியாதை செலுத்தினார்.

அத்துடன் விஜயகாந்த் சிலை அருகே சென்று வணங்கி அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மதுரையில் எல்ஐசி ஊழியராக இருந்த பெண் ஒருவர் சக ஊழியரின் தவறை சுட்டிக்காட்டியதால் அவரைப் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார் சக ஊழியர் ராமகிருஷ்ணன்.

தீ விபத்தில் அவர் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகிய நிலையில், அது விபத்து அல்ல கொலை என்று ஆய்வு செய்து கண்டுபிடித்த தமிழக காவல்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த அளவிற்கு கொடுமையான சம்பவம் என்பதை உணர்ந்து நாம் அனைவரும் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

ஒரு மேலாளராக இருக்கும் பெண்ணுக்கு இந்த நிலைமை என்றால் சாதாரண வேலை செய்யும் மற்ற பெண்களுக்கு என்ன நிலைமை இருக்கும். இந்த குற்ற சம்பவத்தை ஈடுபட்ட ராமகிருஷ்ணன் என்ற அந்த ஊழியருக்கு சட்டம் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் உச்சபட்ச தண்டனையான ஆயுள் தண்டனையை வழங்க வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்துகிறேன்.

அவருக்கு வழங்கப்படும் தண்டனையை கார்த்தி யாருக்கும் இந்த அளவிற்கு என்ன வரக்கூடாது. இது போன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொலைகள் நடைபெறுவது வருத்தமளிக்க கூடிய ஒன்றாக உள்ளது. இது போன்ற கொலைகள் நடைபெறாதவாறு சட்ட ஒழுங்கை காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும்..

கள்ளக்குறிச்சி பொது இடத்தில் கேஸ் இருந்தது ஒரு பெண் உயிரின பெண்டையில் 15 பேர் காயமடைந்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமலும் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ” யாருடன் கூட்டணி என்பது பத்திரிக்கையாளர்களை அழைத்து விரைவில் அறிவிப்பேன். ஆனால் அதற்குள் நான் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகின்றன.

யார் இது போன்ற தவறான தகவல்களை ஊடகங்களுக்கு கொடுப்பது என்பது தெரியவில்லை. ஆனால் செய்திகள் வெளியாகுவதால் பலரும் குழப்பம் அடைகிறார்கள். எனவே கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை தவறான செய்திகளை வெளியிட வேண்டாம்.

23ஆம் தேதி பிரதமர் வருகிறார் என்பதை தொலைக்காட்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். அவர் எதற்காக வருகிறார் என்பது கூட முழுமையாக தெரியவில்லை. மற்றபடி அவர் வருவதற்கு முன்பதாக கூட்டணி தொடர்பாக பேச வேண்டும் என இதுவரை யாருமில்லை கேட்கவில்லை.

இதற்கு இடையே நான்காம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் இருக்கிறது. அதை முடித்த பின்னர் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டால் கண்டிப்பாக ஊடகத்தினரிடம் அறிவிப்பேன்.

சமீபத்தில் குழந்தை ஒன்றுக்கு பெயர் வைப்பது தொடர்பாக தவறான தகவல்கள் வெளியாகியன. ஆனால் அந்த குழந்தைக்கு பின்னர் நான் தான் பெயர் வைத்தேன். எனவே தவறான செய்திகளை வெளியிட வேண்டாம்.

கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு என்பது எங்கள் கட்சி நிர்வாகிகள் தேசிய பின்னரும், எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க உள்ளோமோ அந்த கட்சி தலைமையுடனும் பேசிய பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இதுவரை எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. தேமுதிக இதுவரை கூட்டணி தொடர்பாக முடிவு செய்யவில்லை.

லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு அண்ணியாராக மட்டும் இல்லாமல் அம்மாவாகவும் இருந்து பொறுப்புடன் கட்சியை வழிநடத்துகிறேன். எனவே கூட்டணிக் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுப்பேன்” என்று தெரிவித்தார்.

What do you think?

அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் பொங்கல் பரிசை திருப்பி அனுப்பிய நெல்லை நபர்

ஜனநாயகன் வழக்கு,, தீர்ப்பு தள்ளிவைப்பு!!!.. தணிக்கை வாரியத்தை வறுத்தெடுத்த ஹைகோர்ட்! ??