in

77வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்

77வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்

மாவட்ட ஆட்சியர் மூவர்ண பலூன்களை பறக்க விட்டபோது தேசிய கொடி கம்பத்தில் சிக்கியதால் போலீசார் கொடி கம்பத்தின் மீது ஏறி பலூன்களை மீண்டும் பறக்க வைத்தார்

நாடு முழுவதும் இன்று 77 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் விளையாட்டு மைதானத்தில் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மூவர்ண பலூன்களை காற்றில் பறக்க விட்டார்.அதனைத் தொடர்ந்து காவல்துறை, ஆயுதப்படை ஆகியோர்களின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் பல்வேறு துறைகள் சார்பில் 80 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 19 லட்சத்து 90 ஆயிரத்து 109 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

முன்னதாக மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மூவர்ண பலன்களை பறக்கவிட்டபோது பலூன்கள் தேசிய கொடி கம்பத்தில் சிக்கி கொண்டது இதனை அடுத்து போலீசார் கொடிக்கத்தின் மீது ஏறி உச்சியில் சிக்கிக்கொண்ட பலூனை மீண்டும் காற்றில் பறக்க விட்டார்.

What do you think?

நெய்வேலியில் பஸ்சில் கடத்திவரப்பட்ட சுமார் 21 கிலோ கஞ்சா மூட்டையை பறிமுதல் செய்த காவல்துறையினர்

திருவாடானை அரசு அலுவலகங்களில் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது