பள்ளி வாகன வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அதிருப்தி
நாகையில் பள்ளி வாகன வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அதிருப்தி : 37 பள்ளிகளில் இருந்து 152 வாகனத்தில் 15 தகுதி நீக்கம் செய்து உத்தரவு.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதத்தில் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வாகனங்களில் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆய்வு நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் வட்டார போக்குவரத்து துறை, கல்வித்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்டத்தில் உள்ள 37 பள்ளிகளில் இருந்து 152 பள்ளி வாகனங்களில், 127 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சான்றுகள் வழங்கப்பட்டது. இதில் 15 வாகனங்களுக்கு தகுதி இழப்பு செய்யப்பட்டது.
பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள், ஜிபிஎஸ் கருவிகள், வேகக்கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவிகள், அவசர கால கதவுகள், படிக்கட்டுகள், முதலுதவி பெட்டி போன்ற அம்சங்கள் முறையாக வைக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்துபள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு கையேடுகளை விளங்கிய ஆட்சியர் உங்கள் குழந்தைகளை போல் பள்ளி குழந்தைகளை பாருங்கள் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..