திண்டுக்கல்: கொசவபட்டி ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு -33 பேர் காயம்
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே கொசவபட்டி புனித உத்திரிய மாதா ஆலய புனித அந்தேணியார் திருவிழாவையொட்டி வருடந்தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம் .அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.

ஜல்லிக்கட்டுபோட்டியை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கராபாணி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மாவட்ட ஆட்சியர் சரவணன்,கோட்டாட்சியர் திருமலை,நடிகை துஷாராவிஜயன்,ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளர் கண்ணன் ,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன்உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கால்நடை மருத்துவர்கள் காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் சோதனை செய்து பங்கேற்க அனுமதி வழங்கினர். அதன்படி 770 காளைகளும் 343 மாடுபிடி வீரர்களும் களத்தில் பங்கேற்றனர் .சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சிறந்த வீரர்களுக்கு மிக்ஸி, சைக்கிள்,டேபிள்பேன்,தங்க, வெள்ளி நாணயம்,பட்டு சேலை,மெத்தை,அண்டா,பணம் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் 33பேர் காயமடைந்தனர்.இதில் 6 பேர் பலத்த காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
ஜல்லிக்கட்டு பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை எடிஎஸ்பி மகேஸ்வரன் தலைமையில் சாணார்பட்டி,நத்தம் இன்ஸ்பெக்டர்கள் பிபாகரன், பொன்குணசேகரன் உட்பட 12 இன்ஸ்பெக்டர்களும்,44சப்-இன்ஸ்பெக்டர் 350 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள், விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்


