சின்னத்திரை நடிகை அமுதா தற்கொலைக்கு முயற்சியா?
சென்னையில் வசித்து வரும் சின்னத்திரை நடிகை அமுதா தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவி வரும் நிலையில் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை அமுதா பல சீரியல்களில் நடித்து வருபவர் சன் டிவி கயல் சீரியலிலும் நடித்துவருகிறார்.
இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த “Phenol குடித்ததால் அவரது தோழி மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தகவல் வெளியானது.
அவரது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து நடிகை அமுதா வெளியிட்ட அறிக்கையில் இந்த செய்தி முற்றிலும் தவறு இது வெறும் வதந்தியே யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.