in

ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்

ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்

 

விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டு தங்களது ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்…..

விழுப்புரம் திருப்பதி ரயில் வந்ததும் ரயிலில் இடம் பிடிக்க ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் சென்றதால் பரபரப்பு….

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி முன்னிட்டு நேற்று இரவு முதல் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.

புரட்டாசி மாத பௌர்ணமி நேற்று காலை 11:49 மணிக்கு தொடங்கி இன்று காலை 09:53 மணிக்கு நிறைவடைய உள்ளதால் பக்தர்கள் நேற்று இரவு கிரிவலம் மேற்கொள்ளலாம் என்று அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து நேற்று இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையில் குடை பிடித்த வாரும், நனைந்து கொண்டே கிரிவலம் மேற்கொண்டனர். விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் குவிந்தனர்.

இதனை‌ தொடர்ந்து விழுப்புரம் திருப்பதி ரயில் வந்ததும் ரயிலில் இடம் பிடிக்க ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

What do you think?

நாமக்கல் சக்கரை பட்டி சித்தர் ஆலயத்தில் புரட்டாசி பெளர்ணமி பூஜை பக்தர்கள் வழிபாடு

சிதம்பரம் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்