மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாமன்ற உறுப்பினர்கள் சாலை மறியல் போராட்டம்
தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 30 மற்றும் 31 வார்டு மாமன்ற உறுப்பினர்கள் சாலை மறியல் போராட்டம்.
தஞ்சாவூர் மாநகராட்சி 31 வது வார்டு பகுதியில் உள்ள செண்பகவள்ளி நகரில் பாதாள சாக்கடை பழுதடைந்து கழிவு நீர் சாலையில் பெருகெடுத்து ஓடுகிறது.
இதனால் 30 மற்றும் 31 வது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்கள், அவ்வழியே செல்லும் மாணவர்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து 30வது வார்டு அ.தி.மு.க மாமன்ற உறுப்பினர் கேசவன் மற்றும் 31 வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் ஜெய்சதீஷ் பல முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே உடனடியாக பாதாள சாக்கடையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி மாமன்ற உறுப்பினர் கேசவன் மற்றும் ஜெய்சதீஷ் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வாரத்தில் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தின் பேரில், போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
இதனால் தஞ்சாவூர் காந்திஜி சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


