in

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்.

 

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம். அதிகபட்சமாக கிலோ ஒன்றிற்கு ரூ.73.99 .க்கு ஏலம் போனது.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையிலும், பாபநாசம் கண்காணிப்பாளர் தாட்சாயினி முன்னிலையிலும் நடைபெற்றது.

இம்மறைமுக ஏலமானது மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் நடைபெற்றது. பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 120 விவசாயிகள் தங்களது பருத்தியினை விற்பனைக்கு எடுத்து வந்திருந்தனர். இம்மறைமுக ஏலத்தில் 7 வணிகர்கள் கலந்து கொண்டனர்.

அதிகபட்சமாக பருத்தியானது கிலோ ஒன்றிற்கு ரூ.73.99 என்ற விதத்திலும்,
குறைந்தபட்சமாக கிலோ ஒன்றிற்கு ரூ. 57 எனவும் சராசரியாக கிலோ ஒன்றிற்கு ரூ. 62.50 என்ற வீதத்திலும் விற்பனையானது.

இந்த மறைமுக ஏலத்தில் 54 டன் எடையுள்ள பருத்தியானது ரூ. 37.20 இலட்சத்திற்கு விற்பனை ஆனது. இதில் கும்பகோணம் வேளாண் அலுவலர் தாரா, தஞ்சாவூர் கண்காணிப்பாளர் சித்தார்த்தன் மற்றும் அலுவலக பணியாளர்கள், திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

What do you think?

உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி

தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜாவை கைது செய்ய கூறி புகார் மனு