போதைப்பொருள் கேஸ்ல கைதான இணை தயாரிப்பாளர்
2021-ல சிம்பு நடிச்சு ரிலீஸ் ஆன ‘ஈஸ்வரன்’ படத்தோட இணை தயாரிப்பாளரா இருந்த சர்புதீனை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் ஓஜி கஞ்சா கேஸ்ல கைது பண்ணிருக்காங்க.
இவரோட சேர்த்து சீனிவாசன், சரத்னு மூணு பேரையும் சென்னை போலீஸ் கஞ்சா கேஸ்ல புடிச்சிருக்காங்க.
சர்புதீன் வீட்டுல வார இறுதி நாட்கள்ல நடக்கிற பார்ட்டியில கொக்கெய்ன், மெத்தம்பெட்டமைன், ஓஜி கஞ்சா மாதிரி போதைப்பொருட்கள் யூஸ் பண்ணியிருக்காங்கன்னு சொல்லி அவரைக் கைது பண்ணாங்க.
அதுமட்டுமில்லாம, அவர் வீட்டுல நிறுத்தி இருந்த கார்ல இருந்து ₹27 லட்சம் காசு, மூணு ஆப்பிள் ஐபோன் உட்பட நிறைய பொருள்களைப் பறிமுதல் பண்ணியிருக்காங்க.
இப்போ, போதைப்பொருள் கேஸ்ல கைதான இந்த இணை தயாரிப்பாளர் சர்புதீனை திருமங்கலம் போலீஸ் கஸ்டடியில வெச்சு ரொம்ப தீவிரமா விசாரணை பண்ணிட்டு இருக்காங்க.
சினிமாவுல அவர் யாருக்கெல்லாம் போதைப்பொருள் சப்ளை பண்ணியிருக்காரு?ங்கிற கோணத்துலயும் போலீஸ் விசாரிச்சுட்டு வர்றாங்க.


