சினிமா விநியோகஸ்தர் பிரபாகர் இல்லத் திருமணம்
தஞ்சையில் நடந்த திருமண விழாவில் பிரபு, சரத்குமார், ராதிகா முதல் சிவா வரை ஏராளமான திரைபிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
செங்கோட்டையன் ஒரு அரசியல்வாதி அவர் எடுத்த முடிவு அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார் நடிகர் சரத்குமார்.

விஜய் அரசியல் செயல்பாடு குறித்த கேள்விக்கு கண்ணடித்து வேண்டாம் என்பது போல் சைகை காட்டி விட்டு சென்றார் நடிகர் பிரபு.
தஞ்சை தமிழரசி திருமணம் மண்டபத்தில் சினிமா விநியோகஸ்தர் பிரபாகர் இல்லத் திருமணம் நடைபெற்றது
திருமண விழாவில் நடிகர்கள் சரத்குமார் நடிகை ராதிகா நடிகர் பிரபு, விமல், சிவா, ஜெய், இயக்குனர் ஆர் கே செல்வமணி இசையமைப்பாளர் தீனா முன்னிட்டு ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்
திருமண விழாவிற்கு பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த நடிகர் சரத்குமார்
மழையால் பாதிக்கப்பட்ட நெல்மணிகளுக்கு அரசாங்கம் உரிய நிவாரண வழங்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.
நெல் ஈரப்பதம் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து இதுவரை எந்த அறிவிப்பு வழங்காதது குறித்து கேட்ட கேள்விக்கு திருமண விழாவிற்கு வந்த நாள் விவசாயிகள் குறித்து.

நெல் களஞ்சியத்திலிருந்து பேசுகிறேன் மத்திய அரசு விவசாயிகள் கோரிக்கையை செவி சாய்க்கவில்லை என மாநில அரசு வைக்கின்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது விவசாயிகளுக்கு உதவி செய்கிற ஆட்சி தான் மத்தியில் நடக்கிறது.
செங்கோட்டையன் ஒரு அரசியல்வாதி அவர் எடுத்த முடிவு அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.
நடிகர் பிரபுவுடன் விஜயின் அரசியல் குறித்த கேள்விக்கு
விஜய் அரசியல் செயல்பாடு குறித்த கேள்விக்கு கண்ணடித்து வேண்டாம் என்பது போல் சைகை காட்டி விட்டு சென்றார் பிரபு.


