நவதிருப்பதிகளில் முதல் ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்ச்சவ தோ்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
திரளான பக்தா்கள் பங்கேற்று கோவிந்தா கோபாலா என்ற கோஷங்களுடன் தேரை இழுத்தனா்.
108 வைணவதிவ்ய தேசங்களில் தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் நவதிருப்பதிகள் என்று ஒன்பது திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அதில் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலம் ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோவிலாகும். நவ திருப்பதிகளில் முதல் தலமாகவும் நவகோள்களில் சூாிய அம்சமாகவும் விளங்குகின்றது. மூலவா் ஸ்ரீவைகுண்ட நாதன் என்றும் உற்சவா் கள்ளபிரானாக அருள்பாலிக்கும் இத் திருக்கோவிலில் சித்திரை பிரம்மோஸ்த திருவிழா கடந்த 18ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 தினங்கள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
நாள்தோறும் சுவாமி காலையிலும் மாலையிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா கண்டருளினாா். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக அதிகாலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு காலை சந்தி பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமி ஸ்ரீ கள்ளா்பிரான் அதிகாலையில் திருத்தேருக்கு எழுந்தருளினாா். தோில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் சுவாமிக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
அதனை தொடா்ந்து பக்தா்கள் கோவிந்தா கோபாலா என்ற கோஷங்களுடன் தோ் வடம் பிடித்து இழுத்தனா். தோ் நான்கு ரதவீதிகளில் வலம் வந்தது. இரவில் பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் திருவீதி புறப்பாடு நடைபெறும். நாளை தாமிரபரணி நதியில் தீா்த்தவாாியுடன் சித்திரை பிரம்மோற்ச்சவ திருவிழா நிறைவு பெறுகின்றது.