நாகையில் பிரபல காய்கறி சந்தைக்கு 1.11 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய கட்டிடம் கட்டும் பணியை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த முதலமைச்சர் நாகையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அடிக்கல் நாட்டு தொடங்கி வைத்தனர்
இந்து சமய அறநிலைய துறை சார்பில் பல்வேறு திட்ட பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் அடுத்த தெற்குப் பொய்கை நல்லூர் அருள்மிகு சொர்ணபுரிஸ்வர சுவாமி திருக்கோயில் சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் பிரபல பரவை காய்கறி சந்தையில் 1.11கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்திற்கு காணொலிக்காட்சி வாயிலாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து பரவை காய்கறி சந்தையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டில் பூமி பூஜை செய்தனர். இதில் காய்கறி, பழ வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.