in

மத்திய அரசு தபால் துறை ஊழியர்களுக்கு 8வது ஊதிய குழுவை விரைவில் அமைக்க வலியுறுத்தல்

மத்திய அரசு தபால் துறை ஊழியர்களுக்கு 8வது ஊதிய குழுவை விரைவில் அமைக்க வலியுறுத்தல்

 

மத்திய அரசு தபால் துறை ஊழியர்களுக்கு 8வது ஊதிய குழுவை விரைவில் அமைக்க வேண்டும், தபால்துறை ஊழியர்கள் மாநாட்டில் வலியுறுத்தல்

தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம், எழுத்தர், தபால்காரர், ஊழியர் மற்றும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள், தஞ்சாவூர் கோட்டம் சார்பில் 34வது கோட்ட மாநாடு தஞ்சாவூர் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது.

மாநில செயலாளர் சுகுமாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில செயலாளர் சுகுமாறன் கூறுகையில், மத்திய அரசு ஐடிசி என்ற திட்டத்தை கொண்டு வந்து ஒரே இடத்தில் வைத்து தபால் பட்டுவாடா செய்ய வேண்டும் என்று கூறியது, அந்த திட்டம் ஊழியர்கள், பொதுமக்கள், இடவசதி என பல்வேறு பிரச்சனைகளை கொண்டுள்ளது, .

ஆகவே பழைய முறையே தொடர வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி 3 மாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, தற்போது 2.0 என்ற திட்டம் உருவாக்கப்பட்டு அதில் பெரிய அளவில் குளறுபடி உள்ளது.

அந்தக் குளறுபடிகளை மத்திய அரசு சரி செய்ய வேண்டும் என்றும் 8வது ஊதியகுழு 2026ல் அமல்படுத்தப்பட வேண்டும், எனவே தபால் துறை நிர்வாகமும், மத்திய அரசும் விரைவில் ஊதியக்குழு குழு அமைக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த மாநாட்டில் தபால் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், தபால்காரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What do you think?

நெல் மூட்டைகளை மழைநீர் சூழ்ந்ததால் விவசாயிகள் வேதனை

 வ உ சிதம்பரனார் பிள்ளை 154-வது பிறந்தநாள் விழா